ETV Bharat / state

Neet suicide: இருமுறை நீட் தேர்வில் தோற்றதால் மாணவன் தற்கொலை; தந்தையும் தற்கொலை செய்துக்கொண்ட சோகம்! - சென்னை நீட் தற்கொலை

Tamil Nadu Neet suicide: சென்னை குரோம்பேட்டையில் இரண்டு முறை நீட் தேர்வில் எழுதி தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், மகன் இறந்த அதிர்ச்சியில் அவரது தந்தையும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

chennai
சென்னை
author img

By

Published : Aug 14, 2023, 9:34 AM IST

Updated : Aug 14, 2023, 10:24 AM IST

சென்னை: குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர். புகைப்பட கலைஞரான இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19), பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த பின்பு மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இருமுறை எழுதிய தேர்விலும் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஜெகதீஸ்வரன் சில நாட்களாக தனது தந்தையிடம் புலம்பியுள்ளார். இதனையடுத்து ஜெகதீஸ்வரனுக்கு அவரின் தந்தை செல்வம் ஆறுதல் கூறியும் அவர் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜெகதீஸ்வரன், கடந்த சனிக்கிழமை(ஆகஸ்ட் 12) யாரும் இல்லாத நேரத்தில் அவர் படிக்கும் அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, மாலை நேரத்தில் அவர் வீட்டில் வீட்டு வேலை செய்வதற்கு வந்த மூதாட்டி, ஜெகதீஸ்வரன் கிடந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு நடந்த கொடூரம்.. தமிழக சட்டமன்றத்தின் கருப்பு நாள்.. - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!

இதனையடுத்து மூதாட்டி உடனடியாக ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த அவர், ஜெகதீஸ்வரனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஜெகதீஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஜெகதீஸ்வரன் உடலை கைப்பற்றிய சிட்லப்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு பின்னர், குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், ஜெகதீஸ்வரனின் தற்கொலைக்கு நீட் தேர்வு தோல்வி தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகன் ஜெகதீஸ்வரன் இறப்பை தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவரது தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிட்லப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று செல்வத்தின் உடலை விட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

நீர் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "பாஜகவுடன் கூட்டணி சேர நலம் விரும்பிகள் ஆசை.. ஆனால் ஒருபோதும் நடக்காது" - சரத் பவார் சூசகம்!

Last Updated : Aug 14, 2023, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.