ETV Bharat / state

சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது

author img

By

Published : Dec 8, 2020, 6:38 AM IST

சென்னை: தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 1.36 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது!
சூதாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது!

சென்னை தி.நகர் உஸ்மான் சாலை சரோஜினி தெருவில் உள்ள தனியார் விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாம்பலம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விடுதியில் சோதனை நடத்தினர். சோதனையில் 19 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கோயம்பேட்டை சேர்ந்த அன்சாரி (50), கீழ்பாக்கத்தை சேர்ந்த கவுதம் (63), பெரம்பூரை சேர்ந்த சீனிவாசன் (68), ஜெயபால், ஜோசப் உள்ளிட்ட 19 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இதையும் படிங்க: விமான விபத்தில் உயிரிழந்த கமாண்டரின் உடலை கண்டுபிடித்த இந்திய கப்பல் படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.