சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மொத்தம் 136 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய சில:
ரூ. 1018.85 கோடி மதிப்பீட்டில் ஜெயங்கொண்டம், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம் அறந்தாங்கி,பரமக்குடி,கூடலூர்,திருத்தணி,வள்ளியூர்,திருப்பத்தூர்,காங்கேயம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
தென்காசி , குளித்தலை , திருச்சென்கோடு , அம்பாசமுத்திரம் , ராஜபாளயம் 5 ஆகிய மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தபடும்.
புதிய ஒருங்கிணைத்த ஆய்வகங்கள் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில்15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். பரமக்குடி,கோவில்பட்டி,மணப்பாறை,உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி,மன்னார்குடி,கும்பகோணம்,சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார மையம் ஆகிய பத்து இடங்களில் பன்றிக்காய்ச்சல்,டெங்கு காய்ச்சல்,சிக்குன்குனியா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் கண்டறிய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் புதிய பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அரசு தாலுகா மருத்துவமனை உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனை ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் திருநெல்வேலி மாவட்டம் கண்டியபெரி சேலம் மாவட்டம் அம்மாபேட்டை ஆகிய நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 5.85 கோடி மதிப்பீட்டில் நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவதற்கான ஒளிபுகா அறை மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய் 5 கோடி செலவில் வழங்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் ரூபாய் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு வட்டம் மருத்துவமனை ரூபாய் 2.20 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உடற்கூறுகளை சுத்திகரிக்க நவீன நுண் கதிர் அறை ரூ 1.90 கோடி செலவில் கட்டப்படும் .
சென்னை பெரியார் நகர் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 1.44 கோடி மதிப்பீட்டில் தேவையான கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கி 3 ரத்த வங்கிகள் அமைக்கப்படும்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.25 கோடி மதிப்பில் நவீன பிரேத பரிசோதனை கட்டடம் கருவிகள் வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கித் திட்டத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை அமைக்கப்படும்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 125 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சேலம் திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதயநோய் சிகிச்சை முறைகளை வலுப்படுத்த கேத்லேப் கருவிகள் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் ரூபாய் 8.5 கோடி செலவில் வழங்கப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் நாற்பத்தி எட்டு திட்டத்தின் கீழ் மேலும் வலுப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு,தர்மபுரி,திருவாரூர் தஞ்சாவூர்,திருநெல்வேலி,சிவகங்கை,ஆகிய ஆறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒட்டன்சத்திரம் சீர்காழி மேலூர் ஊத்தங்கரை ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ரூபாய் 237.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் நாற்பத்தி எட்டு திட்டத்தின் கீழ் தென்சென்னை உள்ள சோழிங்கநல்லூர் 100 படுக்கைகளுடன் நவீன கட்டமைப்பு வசதிகளை கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனை 60.65 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொண்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு 40.05 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
வட்டார அளவிலான பொது சுகாதாரத் துறை சேவைகளை வலுப்படுத்தும் விதமாக 178 வட்டாரங்களில் புதிய வட்டார பொது சுகாதார அலகுகள் ரூ 143.96கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு வலிமைப்படுத்தபடும்.
மருத்துவ 400 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 4 கோடி செலவில் பசுமையான இயற்கை சுற்றுச் சூழல் நிறைந்த ஒளிமிகு ஆரம்ப சுகாதார நிலையங்களாக அழகு படுத்தபடும்.
நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ரூபாய் 30 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் நிறுவப்படும்.
16 மாவட்டங்களில் 22 அரசின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் ரூபாய் 26.40 கோடி செலவில் தேசிய நல்வாழ்வு குழுவில் கட்டப்படும்.
24 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் மற்றும் நகர்புற சமுதாய நல மையங்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எலக்ட்ரோ கார்டியோகிராபி, கார்டியோடோகோ கிராபி மற்றும் ரத்த சேமிப்பு கிடங்கு உபகரணங்கள் ரூபாயை 1.76 கோடி செலவில் வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.
அரியலூர், அம்பாசமுத்திரம், பல்லடம், உள்ளிட்ட 14 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களாக ரூபாய் 80 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்படும்.
நகர்புற மக்களுக்கும் ஆரம்ப சுகாதார சேவைகள் உரிய நேரத்தில் உரிய முறையில் சென்றடைய "நகர்புற சுகாதார சீரமைப்பு திட்டம்" செயல்படுத்தப்படும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் அனைவருக்கும் நல வாழ்வு எனும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக ரூபாய் 423.64 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சேவைகளை மேம்படுத்தி அனைவருக்கும் நல வாழ்வு என்ற இலக்கினை அடைந்திடும் வகையில் ஊரக பகுதியில் உள்ள 2443 கிராம துணை சுகாதார நிலையங்கள் நலவாழ்வு மையங்கள் ஆக ரூபாய் முப்பத்தி 34.42 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படும்.
2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத தமிழ்நாடு என்னும் இலக்கை அடைய அதிநவீன ஆய்வக உபகரணங்கள் மற்றும் நுகர் பொருட்கள் ரூபாய் 48.85 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் விதமாக 33 மாவட்டங்களில் காசநோய் தீவிர கணக்கெடுப்பின் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் உரிய சிகிச்சை வழங்கவும் ரூபாய் 9.41 கோடி செலவிடப்படும்.
தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்குள் காச நோய் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் எடுக்கப்படும் சிடி மற்றும் எக்ஸ்ரே படங்களை ஒருங்கிணைந்து செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தொழில்நுட்பம் வாயிலாக காச நோய் கண்டறிய அதிநவீன புதிய சேவைகள் ரூபாய் 1.87 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தாய் சேய் நல சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சென்னை ஆர்எஸ் ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தேசிய நலவாழ்வு குடும்ப நிதியில் தாய் சேய் நல ஒப்புயர்வு மையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூபாய் என்று 84.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் அனைவருக்கும் நல வாழ்வு எனும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக ரூபாய் 423.64 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் வழங்கப்படும்.
நகர்ப்புற மக்களுக்கும் ஆரம்ப சுகாதார சேவைகள் உரிய நேரத்தில் உரிய முறையில் சென்றடைய நகர்புற சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரழிவு நோய் பரிசோதனை காலை 7 மணி முதல் செய்யப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 29.64 இலட்சம் நீரிழிவு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மக்களை தேடி மருத்துவ முகாம்களின் மூலம் மேலும் 62 லட்சம் சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இனிவரும் நாட்களில் காலை 7 மணி முதல் பரிசோதனை.
2030ஆம் ஆண்டிற்குள் புற்று நோய்களால் ஏற்படும் இறப்பினை தவிர்க்கும் அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் தற்போதைய புற்று நோய் பராமரிப்பு சேவைகளை மக்களை தேடி மருத்துவத்துடன் ஒருங்கிணைத்து மறுசீரமைப்பு அதற்காக ரூபாய் 19.21 கோடி செலவிடப்படும்.
நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூபாய் 30 கோடி செலவில் தேசிய நல்வாழ்வு குழுவில் நிறுவப்படும்.
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு குருத்தணு பதிவேடு சென்னை அரசு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கிவரும் பிரத்தியேக ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ 30 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
பொது சுகாதாரத் துறையின் நிறைவை சிறப்பிக்கும் வகையில் பன்னாட்டு பொது சுகாதார மாநாடு நடத்தப்படும்.
தமிழகத்தில் லெப்டினன்ட் கர்னல் ரசல் என்ற ஆங்கிலேயர் முதல் பொது சுகாதாரத் துறை இயக்குனராக 1922 ஆம் ஆண்டில் பணியேற்றார்.
2022-ஆம் ஆண்டு பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பன்னாட்டு பொது சுகாதார மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கும் நடைமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக சென்னை மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுடைய அனைத்து வளரிளம் பெண்களுக்கு ரூபாய் 7.15 கோடி செலவில் ஹெச்.பி.வி தடுப்பூசி செலுத்தப்படும்.
ஊரகப் பகுதிகளில் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வரும் 316 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிதாக கட்டடங்கள் ரூபாய் 102.61 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிங்க:இந்தியா என்றால் வர்த்தகம்... செமிகான் மாநாட்டில் பிரதமர் மோடி...