18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா 2021 ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி முதல் 25 வரை நடைபெறும் என சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்புக் குழுவான இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஆதரவுடன் இந்த விழா நடைபெற உள்ளது.
உலக சினிமா, தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டி, இந்தியன் பனோரமா, ரெட்ரோஸ்பெக்டிவ், கன்ட்ரி ஃபோகஸ் என அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டியில் பங்கேற்க, 2019 அக்டோபர் 16 முதல் 2020 அக்டோபர் 15 வரையிலான காலகட்டத்தில் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களே போட்டியில் பங்கேற்க தகுதியானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கு பெற வழிமுறைகள்:
போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் (website icaf.in) என்ற இணையதளத்தில் உள்ளன. அல்லது, நம்பர் 4, இரண்டாவது தளம், இ-பிளாக், ஜெமினி பார்ஸன் அப்பார்ட்மன்ட்ஸ், கதீட்ரல் கார்டன் ரோடு, சென்னை- 600006-ல் அமைந்துள்ள இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு எண்: +91 44 2821 2652 . இமெயில் முகவரி: thangaraj_icaf@hotmail.com / iindocine.ciff@gm
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் ஜனவரி 9, 2021. விண்ணப்பங்களுடன் ஆங்கில சப்டைட்டிலுடன் கூடிய திரைப்படத்தின் 2 டிவிடி.,க்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க:இது நம்ப ஆட்டம்... சிக்ஸ் பேக்கில் மாஸாக மிரட்டும் ஆர்யா