கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர்.
இதையடுத்து, மத்திய அரசு சில நாள்களாக வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்களை இயக்கிவருகிறது.
சென்னையில், முதல்கட்டமாக நேற்று முன்தினம், தூபாயில் சிக்கியிருந்த 359 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதையடுத்து குவைத்தில் சிக்கியிருந்த 165 பேர் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்கு குடியுரிமை , சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.
பின்னர் இவர்கள் அனைவரும் தனியார் கல்லூரிகளிலும், விடுதிகளிலும் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வந்த தமிழர்கள்!