ETV Bharat / state

150 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - சென்னை அண்மை செய்திகள்

செம்பியம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Court orders to Chennai Collector
Court orders to Chennai Collector
author img

By

Published : Jun 24, 2021, 5:08 PM IST

சென்னை: பெரம்பூரை அடுத்த செம்பியம் பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 150 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 24) நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் ஆட்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 150 ஏக்கர் நிலத்தில், சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை முறைகேடு செய்து சிலர் பட்டா பெற்றுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த நிலத்தின் பேரில் சிண்டிகேட் வங்கியில் சுமார் 9 கோடி ரூபாய்வரை கடன் பெற்று, அதனை செலுத்தாததால் தற்போது அந்த நிலம் ஏலத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டடங்களை இடித்து நிலத்தை அரசுடைமையாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

மனுதாரரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலம் மற்றும் நீர்நிலை பகுதிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூலை 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: சுசீல் ஹரி பள்ளி நிர்வாகி ஜாமீன் மனு - சிபிசிஐடி விளக்கமளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.