சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெளியே இன்று அதிகாலை 1.10 மணியளவில் வந்த ரசிகை ஒருவர் ரஜினியை பார்க்க வேண்டும் என காவலாளியிடம் தெரிவித்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் செக்யூரிட்டிகள், சிறுமி வந்துள்ளது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், சிறுமி நேற்று காலை 11 மணிக்கு ஆசிரியர் ஒருவரை பார்த்து விட்டு வருகிறேன் என வீட்டில் கூறிவிட்டு சேலத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு நேற்று இரவு சென்னை வந்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விடிய விடிய விசாரணை!
பின்னர் ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் ஆர்வத்தில் வீட்டை தேடி போயஸ் கார்டன் வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னை அடுத்த பம்மலில் உள்ள அவரது உறவினர் சின்ன பொண்ணுவுக்கு தகவல் தெரிவித்து, அவரை நேரில் வரவழைத்து இன்று காலை சிறுமியை போலீசார் ஒப்படைத்தனர்.
பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு நடிகர் ரஜினியை பார்க்க வேண்டும் சேலத்தில் இருந்து வந்த 15 வயது பள்ளி சிறுமியால் போயஸ் கார்டன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Jailer Pre-Booking: விறுவிறுப்பான முன்பதிவில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்!