சென்னை: ஒடிசாவை சேர்ந்தவர் கமலகாந்த் பரிக். இவர் சென்னை சாஸ்திரி நகர் 11ஆவது குறுக்கு தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் 4ஆவது மாடியில் கணபதி என்பவருடைய வீட்டில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அதே வீட்டிலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தனது மனைவி, 15 மாத ஆண் குழந்தையான ஹிமாசு பரிக்யுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கமலகாந்த் பாரிக்கின் மனைவி, தாங்கள் வசிக்கும் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் சிலாப்பில் குழந்தையை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது குழந்தை தவறி விழுந்தது.
தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை பெற்றோர் மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.
இதுதொடர்பாக சாஸ்திரிநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குளத்தில் வீசி செல்லப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை!