நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க, அமெரிக்கா, ஹாங்காங், சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சிங்கப்பூரிலிருந்து கண்டெய்னர்கள் மூலமாக 140 டன் ஆக்சிஜனை கடல் வாயிலாக ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து, சென்னை மற்றும் சேலத்திற்கு இன்று (மே.25) ஆக்சிஜன் வந்தடைந்தன. அவை, அங்கிருந்து தேவை உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒரு நாள் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 519 மெட்ரிக் டன்னிலிருந்து 650 மெட்ரிக் ஆக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.