சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் பிரதிநிதிகளிடம் கூறியதாவது,
- இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 12 அரசு பரிசோதனை மையங்களும் 18 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன.
- இங்கு பரிசோதனை மேற்கொள்பவரின் பெயர், முகவரி, வயது, பாலினம், தொலைபேசி எண், தொழில் விவரம், குடும்பத்தினரின் தகவல்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனை கூடங்கள் பின்பற்ற வேண்டும்.
- பரிசோதனைக் கூடங்களில் ஐசிஎம்ஆர் வழிமுறைகளை பின்பற்றி அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- பரிசோதனை மையங்களில் வாயில்களில் ஐ சி எம் ஆர் வழிமுறைகளை பின்பற்றி பேனர் வைக்க வேண்டும்.
- வீடுகளுக்குச் சென்று கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இரட்டிப்பான பிரசவங்கள்... குழந்தைகள் வாசனையால் நிரம்பிய அரியலூர் மருத்துவமனை!