தமிழ்நாட்டின் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த 14 பேர் காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், ராஜேஷ்வரி, ராஜசேகர், வெற்றி செல்வன், கண்ணன், கோவிந்த ராஜுவ் உள்ளிட்ட 14 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) பதவிஉயர்வு பெற்று காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளராக (ஏடிஎஸ்பி) நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.