சென்னை: 13ஆவது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி குறித்து, சென்னை நேரு மைதானத்தில் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தினர் இன்று(ஜூன் 17) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் வாசுதேவன், "13-ஆவது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டி வரும் 19ஆம் தேதி முதல் எழும்பூர் அம்பஸ்டர் பால்வா விடுதியில் 8 நாட்கள் நடைபெறவுள்ளது.
முதல் பரிசாக மூன்று லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக இரண்டு லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதுவரை போட்டியில் கலந்து கொள்ள 268 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 28 வெளிநாட்டு வீரர்கள், 50க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தவர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
சதுரங்க போட்டியில் முன் அனுபவம் இல்லாதவர்களும் ரூ.7500 கட்டணமாக செலுத்தி போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும், போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாததால் பள்ளி மூடல் - பழங்குடியின மக்கள் வேதனை!