சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 29 ஆயிரத்து 261 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் தமிழ்நாட்டில் 1,357 நபர்கள் உட்பட 1,359 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 69 லட்சத்து 72 ஆயிரத்து 660 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. 35 லட்சத்து 45 ஆயிரத்து 605 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.
தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 12,228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,802 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 95 ஆயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிதாக 309 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 136 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 142 நபர்களுக்கும், சேலத்தில் 61 நபர்களுக்கும், ஈரோட்டில் 72 நபர்களுக்கும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் இன்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இதையும் படிங்க: டெல்லியில் 2 பேருக்கு குரங்கம்மை அறிகுறி