ETV Bharat / state

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ. 13.7 கோடி அபராதம் வசூல்! - அசையும் சொத்துக்கள்

சென்னை போக்குவரத்து காவல்துறையினர் குடிபோதையில் வாகனம் ஓட்டி போக்குவரது விதிகளை மீரியவர்களிடம் இருந்து சுமார் ரூ.13.7 கோடி வரை அபராதம் வசூல் செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 4, 2023, 11:02 PM IST

சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறையினர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் சுமார் ரூபாய் 13.7 கோடி வரை அபராதம் வசூல் செய்துள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் மோட்டார் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகின்றனர். சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, முக்கிய காரணமாக உள்ளது. எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டினால் சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக அபராதத் தொகை ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது.

இந்த தொகை அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. மேலும், நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவது இல்லை. மேலும் 9,534 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

எனவே இது போன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னையில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து. கடந்த 03.06.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 277 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.28,72,500 வசூலீக்கப்பட்டது.

இதையும் படிங்க: மெரினாவில் காதல் ஜோடியிடம் அத்துமீறல்..ரவுடிகளை துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் காவலர் கலா!

கடந்த ஐந்து மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 13,251 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ 13.7 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போல இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 4,112 குடிபோதை வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.4,26,13,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யபடும் என்றும், ஏற்கனவே இது போன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 371 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது என்றும் போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: Odisha Train Accident : "பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பிற்கு நாங்கள் பொறுப்பு" - கவுதம் அதானி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.