ETV Bharat / state

சென்னையில் ஊரடங்கு மீறல்: ஒரே நாளில் 1,268 வழக்குகள் பதிவு - chennai news

சென்னை: முழு ஊரடங்கை மீறியதாக நேற்று ஒரே நாளில் 1,268 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

lockdown norms
சென்னை
author img

By

Published : May 16, 2021, 3:08 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும், வாகனங்களை பறிமுதல் செய்யக்கூடாது என்றும் டிஜிபி காவல் துறையினருக்கு உத்தரவிட்டதால், வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்ட காவலர்கள் பொதுமக்களை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கவில்லை.

இந்நிலையில், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வாகனங்களிலும் தெருக்களிலும் சுற்றித் திரிந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு காவல் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியது. அதில், முழு ஊரடங்கை கெடுபிடியாக்க முடிவு செய்தனர். அதனடிப்படையில் நேற்று பல்வேறு இடங்களில் தீவிரமாக வாகனத் தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களின் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்ததோடு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவும் செய்தனர். முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றாமல் போனவர்கள் அபராதத் தொகையை செலுத்தினர்.

இந்நிலையில், நேற்று மட்டும் சென்னையில் ஊரடங்கை மீறியதாக 1,268 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 2,864 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாமல் சென்றதாக 2,485 நபர்கள் மீது வழக்குப்பதிவும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் சென்றதாக 278 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, ஊரடங்கை மீறி செயல்பட்ட 55 கடைகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.