ETV Bharat / state

காலியாக இருக்கும் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்... 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தவிப்பு... - மாணவர்கள் தவிப்பு

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் கடந்த பின்னரும், முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்கள் காலியாக இருப்பதால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலாண்டுத் தேர்வை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காலியாக இருக்கும் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்..., 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தவிப்பு ...,

author img

By

Published : Aug 25, 2022, 4:43 PM IST

சென்னை: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 3000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது காலி பணியிடங்களின் எண்ணிக்கை 4000ஆக அதிகரித்துள்ளது. பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

இதனால் மாணவர்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அதிகப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே காலாண்டுத் தேர்வு அட்டவணை ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.

ஆசிரியர்கள் இல்லாமல் மூன்று மாதங்களைக் கடந்த மாணவர்கள், காலாண்டுத் தேர்வை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே இருக்கின்றனர் .

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டப்பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணிகளை விரைவுபடுத்தி போர்க்கால அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்தால் மட்டுமே அரையாண்டுத் தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் தயாராக முடியும். அவ்வாறு இல்லாவிட்டால், பொதுத்தேர்வில் பாதிப்பு ஏற்படும் என்பதும் ஆசிரியர்களின் கருத்தாக இருக்கிறது.

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.