சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளையும் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் காரணத்தால், நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா போக்குவரத்து அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
இதனிடையே, தொற்று பரவக்கூடிய இடங்களைக் கண்டறிந்து முழு முடக்கத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் சுகாதரத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 1,170 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எலும்பு மெலிதல் நோய் தினம்: ஏன், எதனால், என்ன செய்யலாம்?