ETV Bharat / state

TNPSC குரூப் 2, 2ஏ பணிகளுக்கான போட்டித் தேர்வு: 11 லட்சம் பேர் விண்ணப்பம்! - TNPSC குரூப் 2, 2ஏ பணி

தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2, குருப் 2ஏ ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 413 இடங்களுக்கு சுமார் 11 லட்சத்து 61 ஆயிரத்து 192 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

TNPSC குரூப் 2, 2ஏ பணிகளுக்கான போட்டித் தேர்வு

author img

By

Published : Mar 24, 2022, 6:42 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குரூப் 2ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இவர்களுக்கு வரும் மே மாதம் 21 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு பிப்ரவரி 23 ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் செய்தவர்கள் தவறுகள் இருந்தால் திருத்தம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் விண்ணப்பத்திற்கான அறிவிப்பாணையில் தேர்விற்கான முழு தகவல்களும் வழங்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதுவதற்கு 11 லட்சத்து 61 ஆயிரத்து 192 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: உலகக் கண்காட்சியில் பங்கேற்க துபாய்க்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.