ETV Bharat / state

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல் எப்போது? - அரசு தேர்வுத்துறை

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானதை அடுத்து மே 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

10th std
author img

By

Published : Apr 29, 2019, 9:40 AM IST

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

மார்ச் 2019 பொதுத்தேர்வில் தேர்வெழுதப் பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

10 ம் வகுப்பு மாணவர்கள் 2 ந் தேதி முதல்
 மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் 

சென்னை, 
10 ம் வகுப்பு மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு   மே 2ந் தேதி முதல் 4 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 
 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு
பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
  மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே   2 ந் தேதி  முதல்  4 ந் தேதி 
மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள்
தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
  
 மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள்  தாங்கள் படித்த பள்ளியிலும்,
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப
எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

 மார்ச் 2019 பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் ,  வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப்
பொதுத்தேர்வு ஜூன்  14 ந் தேதி  முதல் 22 ந் தேதி  வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு
விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.