கரூர் மாவட்டத்தில் 2014ஆம் ஆண்டு சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவரை 108 ஆம்புலன்சில் ஓட்டுநர் சரவணன் என்பவர் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
விபத்துக்குள்ளானவரிடமிருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சரவணன் பணத்தை அபகரித்துள்ளார். இதையடுத்து, விபத்துக்குள்ளானவருக்குச் சொந்தமான பணத்தைக் கொடுக்காததால், ஓட்டுநர் சரவணனைப் பணி நீக்கம் செய்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை உறுதி செய்ய மறுத்து, தொழிலாளர் நல உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், உயிர்காக்கும் சேவையான ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றுபவர்கள், உச்சபட்ச நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்டிருக்க வேண்டும். தவறான நடத்தை ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருத்து தெரிவித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சரவணனைப் பணி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு