சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக்.28) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 405 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,061 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 98 லட்சத்து 66 ஆயிரத்து 254 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 26 லட்சத்து 99 ஆயிரத்து 554 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர்.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 12,051 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 1,286 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 51 ஆயிரத்து 431 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 3 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 9 நோயாளிகள் என 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 72 என உயர்ந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,54,323
கோயம்புத்தூர்- 2,46,423
செங்கல்பட்டு - 1,71,514
திருவள்ளூர் - 1,19,271
ஈரோடு - 1,04,094
சேலம் - 99,709
திருப்பூர் - 95,195
திருச்சிராப்பள்ளி - 77,418
மதுரை - 75,170
காஞ்சிபுரம் - 74,873
தஞ்சாவூர் - 75,231
கடலூர் - 64,032
கன்னியாகுமரி - 62,311
தூத்துக்குடி - 56,269
திருவண்ணாமலை - 54,916
நாமக்கல் - 52,112
வேலூர் - 49,820
திருநெல்வேலி - 49,340
விருதுநகர் - 46,276
விழுப்புரம் - 45,828
தேனி - 43,564
ராணிப்பேட்டை - 43,401
கிருஷ்ணகிரி - 43,519
திருவாரூர் - 41,393
திண்டுக்கல் - 33,075
நீலகிரி - 33,511
கள்ளக்குறிச்சி - 31,325
புதுக்கோட்டை - 30,152
திருப்பத்தூர் - 29,274
தென்காசி - 27,348
தருமபுரி - 28,385
கரூர் - 24,031
மயிலாடுதுறை - 23,264
ராமநாதபுரம் - 20,556
நாகப்பட்டினம் - 21,034
சிவகங்கை - 20,158
அரியலூர் - 16,843
பெரம்பலூர் - 12,055
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1028
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085
ரயில் மூலம் வந்தவர்கள் - 428