ETV Bharat / state

பழங்குடியினருக்கு 100% தடுப்பூசி சாத்தியமானது எப்படி?

பழங்குடியின மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து பரவிய தவறான தகவல்களைக் களைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

author img

By

Published : Jul 1, 2021, 2:26 PM IST

Updated : Jul 1, 2021, 8:47 PM IST

சென்னை: மருத்துவர்கள் தின விழாவில் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு தடுப்பூசி வழங்கியதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பாராட்டி விருது வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள 21,800 பழங்குடியினர் தகுதிவாய்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஜுன் 29 ஆம் தேதியோடு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டு விட்டது. இதன் மூலம், நாட்டிலேயே பழங்குடியினர்கள் 100 விழுக்காடு தடுப்பூசி எடுத்துக் கொண்ட மாவட்டமாக நீலகிரி மாறியுள்ளது.

இந்நிலையில், விழா முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "பழங்குடியின மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து பரவிய தவறான தகவலை களைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அச்சத்தை நீக்கினோம். பழங்குடியின தலைவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி அவர்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் பழங்குடியின மக்களிடம் தடுப்பூசியினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை விளக்கி கூறினார்கள். அதன் பின்னர் தடுப்பூசி செலுத்தினோம்,

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிக்கான கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாகு அறிவுறுத்தலின்படி தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தினோம்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாவட்டதிற்கு வந்தபோது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவையான தடுப்பூசிகளை வழங்குவதாகும் தெரிவித்தார். அதன் அடிப்படையிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி தருவதாக அமைச்சர் கூறியுள்ளார். அவர்களுக்கும் அளித்தவுடன் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டமாக நீலகிரி மாறும்.

மக்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் மாவட்டத்தில் நோய் தொற்று கட்டுக்குள் உள்ளது. சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு உரிய வழிகாட்டுதல்களை அரசு அளிக்கும். அதன் பின்னர் கட்டுப்பாட்டு முறைகளை முழுமையாகப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேசிய மருத்துவர்கள் தினம் - தலைவர்கள் வாழ்த்து

Last Updated : Jul 1, 2021, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.