ETV Bharat / state

சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் பயணம்

author img

By

Published : Jul 26, 2022, 7:07 PM IST

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களிடம் சதுரங்கப் போட்டி குறித்த ஆர்வத்தை உருவாக்குவதற்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 100 மாணவர்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் பயணம்
சதுரங்கப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் பெங்களூருக்கு சிறப்பு விமானத்தில் பயணம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்" என்று அறிவித்திருந்தார்.

இதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்றுநரைக் கொண்டு மாவட்ட அளவில் சதுரங்க விளையாட்டில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டின் நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று விளையாடி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காணவும், சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாடவும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 1 - 5 வகுப்புகள், 6 - 8 வகுப்புகள், 9 -10 வகுப்புகள், 11 - 12 வகுப்புகள் என 4 பிரிவுகளாக நடைபெற்றன.

இதில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 100 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூர் வரை சென்று திரும்பும் வகையில் அழைத்துச் செல்லவும், விமானத்தினுள் சிறப்பு சதுரங்கப் போட்டி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு அமைச்சர்கள் விருது வழங்கி சிறப்பு செய்ய உள்ளனர்.

சென்னையிலிருந்து பெங்களூர் வரை சென்று திரும்பும் வகையில் அழைத்துச் செல்ல உள்ள சிறப்பு விமானத்தினை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் நாளை பிற்பகல் 1 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் கொட்டும்மழையில் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்ற அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.