ETV Bharat / state

போலி எல்ஜி பெருங்காய மோசடி: மக்களே உஷார் - பெருங்காயம் தூள் மூலப்பொருள்கள்

தமிழ்நாட்டில் எல்ஜி பெருங்காயத்தை போலவே போலியாக தயாரிக்கப்பட்ட பெருங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

போலி எல்ஜி பெருங்காய மோசடி
போலி எல்ஜி பெருங்காய மோசடி
author img

By

Published : Jan 8, 2023, 9:06 AM IST

சென்னை: பொதுமக்கள் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய பொருளான எல்ஜி பெருங்காயத்தை போலியாக தயாரித்து விற்பனை செய்த வழக்கில் பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் வர்கர். இவர் தலைமுறை, தலைமுறையாக எல்ஜி பெருங்காய நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், எல்ஜி பெருங்காயத்தை முத்திரை பதிவு சட்டம் விதிகளின்படி பதிவு செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் முத்திரையை தவறாக பயன்படுத்தி சில நபர்கள் போலியாக தயாரித்த எல்ஜி பெருங்காயத்தை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விற்பனை செய்வதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 6 மாதத்திற்கு முன்பு புகார் மனு அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 15 இடங்களில் சென்னை முழுவதும் எல்ஜி பெருங்காயத்தை போலியாக உற்பத்தி செய்வதும் மற்றும் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் பீட்டர், மணிகண்டன், ரவி, சதீஷ் மற்றும் வண்ணாரப்பேட்டை சேர்ந்த செல்வராஜ், சுமதி, ராமலிங்கம் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலியாக தயாரித்து வைக்கப்பட்டிருந்த எல்ஜி பெருங்காய கட்டி மற்றும் தூள் மற்றும் மூலப் பொருட்கள், காலி டப்பாக்கள், எல்ஜி பெருங்காயம் முத்திரை அச்சிட பயன்படும் அச்சு எந்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: குழாய் வழியாக 31 கிலோ ஹெராயின் கடத்தல்.. ராணுவ வீரர் உட்பட இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.