சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாரியப்பன், ஆனந்த், அன்சார் அலி, ஜெயின் அலாவுதீன், செந்தில் குமார் (எ) இன்சூரன்ஸ் செந்தில் ஆகிய ஐந்து பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்ய மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவு காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் பரிந்துரைத்தார்.
இதைப்போல, மைக்கேல்ராஜ், பிரபாகரன், இளவரசன், சதாசிவம் ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்ய T-9 பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரைசெய்தார்.
இதன்பேரில், மேற்படி 10 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க நேற்று (பிப். 13) காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில், 10 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆன்லைன் மோசடி
மாரியப்பன், ஆனந்த், அன்சார் அலி, ஜெயின் அலாவுதீன், செந்தில் குமார் (எ) இன்சூரன்ஸ் செந்தில் ஆகிய ஐந்து நபர்களும் சேர்ந்து ஆன்லைன் மூலம் போலி வாகன காப்பீடு ஆவணங்களைத் தயார்செய்து வாகன உரிமையாளர்களை மோசடிசெய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்றப்பிரிவில் வழக்குகள் பதிவுசெய்ததுடன், அவர்களிடமிருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள ஆவணங்கள், செல்போன், மடிக்கணினி, ஒன்பது லட்சத்து 54 ஆயிரத்து 910 ரூபாய், 133 சவரன் தங்க நகைகள், ஒரு கார் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
பன்னீர்செல்வம், மைக்கேல்ராஜ், பிரபாகரன், இளவரசன், சதாசிவம் ஆகிய ஐந்து நபர்கள் மீதும் பட்டாபிராம் காவல் நிலைய எல்லையில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி அன்று பரத் என்பவரைக் கொலைசெய்ய முயன்றதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!