சென்னை போரூரில் தமிழ்நாடு அரசால் தடைச் செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் ஆய்வாளர் சந்திரா தலைமையில் சென்ற காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 63 ஆயிரம் ரொக்க பணம், ஐந்து செல்போன், பில் புக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
உள்ளூர் காவல்துறையினர் லாட்டரி விற்பனையை கண்டுக்கொள்ளாத நிலையில் குற்ற நுண்ணறிவு காவல்துறையினர் லாட்டரி விற்பனையை தடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயில் கும்பாபிஷேக விழா: செயின் திருட முயன்ற பெண்கள் கைது!