ETV Bharat / state

சென்னை வந்தடைந்த ஒரு லட்சம் நியூமோகாக்கல் தடுப்பூசிகள்!

author img

By

Published : Aug 13, 2021, 8:33 AM IST

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஒரு லட்சம் நியூமோகாக்கல் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

சென்னை
சென்னை

நிமோனியா நோய் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு 15 விழுக்காடு இறப்பு ஏற்படுகிறது. இந்திய அளவில் 1.2 மில்லியன் குழந்தைகள் தங்களது ஐந்தாவது வயதிற்குள் இறக்கின்றனர்.

நிமோனியா நோய்க்கு தடுப்பு மருந்தாக ’நிமோகாக்கல் காஞ்சுகேட்’ என்னும் தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையில், ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசியும் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிறந்த குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதங்கள் என மூன்று தவணையாக நியூமோகாக்கல் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

1 லட்சம் நியூமோகாக்கல் தடுப்பூசிகள் சென்னை வந்தன

இதற்காக தமிழ்நாடு அரசு நியூமோகாக்கல் மருந்தை கொள்முதல் செய்து வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசுக்காக புனேவில் இருந்து விமானம் மூலம் 20 பெட்டிகளில் ஒரு லட்சம் நியூமோகாக்கல் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

இந்தத் தடுப்பூசிகள் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருத்துவக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் 2 வயது சிறுவன் இடம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.