ETV Bharat / state

ஆந்திர இளைஞர்களிடம் 1.50 கோடி ரூபாய் பறிமுதல் - 1.50 crore confiscated from Andhra youth

சென்னை கொடுங்கையூர் பகுதியில் காரில் வந்த ஆந்திர மாநில இளைஞர்களிடமிருந்து 1.50 கோடி ரூபாயை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

பணம் பறிமுதல்  சென்னை கொடுங்கையூரில் பணம் பறிமுதல்  இளைஞர்களிடமிருந்து பணம் பறிமுதல்  பணம் பறிமுதல்  கோடி கணக்கில் பணம்  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  money seizer  seizer of money in chennai  1.50 crore confiscated from Andhra youth  1.50 crore confiscated
பணம் பறிமுதல்
author img

By

Published : Oct 14, 2021, 7:56 AM IST

சென்னை: கொடுங்கையூர் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த கார் ஒன்றை மடக்கி நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது காரில் பத்து பைகளில் சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்ததைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து காரில் வந்த இரண்டு நபர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பயாஸ், கோபால் எனத் தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்த பணத்திற்கு முறையான ஆவணம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணத்தை எங்கு எடுத்துச் செல்கிறார்கள் என்பது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'டிக் டாக்' பிரபலங்களை ஆபாசப் படம் எடுத்து பணமோசடி; ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.