2012ஆம் ஆண்டு, சென்னை சர்தார் பட்டேல் சாலையில் பைக்கில் சென்ற ராஜேஷ் மீது, பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பிற்கு ரூ. 2 கோடி இழப்பீடு வழங்கக் கோரி அவரது பெற்றோர், மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையின் இறுதியில், விபத்து எற்பட்ட போது ராஜேஷ் மாதம் 71 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார். இதனடிப்படையில், ஒரு கோடியே 10 லட்சத்து 35 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை வழக்கு தொடர்ந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 7.5 சதவீத வட்டியுடன் சேர்ந்து அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய நியூ இந்திய அசூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: போதையில் போலீஸாருடன் தகராறு செய்த குடிமகன்...