ETV Bharat / state

1 கோடியே 37 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்! - beneficiaries of CM insurance scheme

தற்போது 1 கோடியே 37 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர் எனவும், இதிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஆண்டு ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

1 கோடியே 37 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர் - மா.சுப்பிரமணியமன் தகவல்

author img

By

Published : May 19, 2022, 3:15 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யும் மையத்தை இன்று நேரில் திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஏழை எளியோர் பயன் பெறுவதற்காக 2009ஆம் ஆண்டு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளில் 1,12,65,062 பயனாளிகள் 10,388 கோடி ரூபாய்க்கு காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர்.

தற்போது 1 கோடியே 37 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். இந்த குடும்பங்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. 800 அரசு மருத்துவமனைகள், 900 தனியார் மருத்துவமனைகள் என 1700 மருத்துவமனைகளில் இத்திட்டம் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த 5 ஆண்டுளுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.7,730 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் அதற்கு கையெழுத்திட்டுள்ளார்.

1 கோடியே 37 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர் - மா.சுப்பிரமணியமன் தகவல்
1 கோடியே 37 லட்சம் குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர் - மா.சுப்பிரமணியன் தகவல்

கூடுதல் காப்பீட்டு அட்டை பதிவு மையங்கள்: மொத்தம் 1,090 சிகிச்சை முறைகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மேலும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநேரம், ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் 640 மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. நான்கு மாதத்தில் 63,515 பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் மையம் உள்ளது.

மக்கள் சிரமத்தைப் போக்க முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் அட்டையினைப் பெறுவதற்காக சிறப்பு அலுவலகத்தை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்டதில், தென்சென்னையில் உள்ளவர்கள் அதில் பயனடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது இங்கு (சென்னை வள்ளுவர் கோட்டம்) தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், வட சென்னையில் திறப்பதற்கான இடமானது தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் இதுபோன்று கூடுதல் காப்பீட்டு அட்டை பதிவு மையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் தக்காளி காய்சல் இல்லை - மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.