செங்கல்பட்டு: வீராபுரம் பரனூர் கிராமத்தில் வசித்து வரும் டில்லி (35) கட்டிடவேலை செய்து வருகிறார். இவரது மகள் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜேஷ்(வயது 21) டில்லியின் மகளிடம் தந்தை அழைத்து வர சொன்னதாக கூறியுள்ளார். ஆனால் வரமுடியாது என அம்மாணவி பிடிவாதம் பிடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், மாணவியின் கையை பிடித்து இழுத்திருக்கிறார். இது குறித்து மாணவி தனது தந்தைக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
மகள் அழைப்பை கேட்டு பதற்றம் அடைந்த டில்லி, விரைந்து சென்று இரும்பு கம்பியால் இளைஞரை ஓட ஓட விரட்டி தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த அப்பகுதி மக்கள், டில்லியை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'திருடன் திருடன்' எனக் கூச்சலிட்டவாறே கொலை