செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் கடந்த 22 நாள்களுக்கு மேலாக காவல் துறையுடன் சேர்ந்து பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ், ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு அச்சரப்பாக்கம் காவல்துறை சார்பில் சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள அரிசி, காய்கறிகள், முட்டை, மளிகை பொருள்கள் போன்றவற்றை மதுராந்தகம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் ஏற்பாடு செய்தார். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: சாலையில் ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் துறையினர்