வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, கட்டணத்திற்காக பணப் பரிவர்த்தனை செய்யும்போது காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் அதிகளவு வாகனங்கள் வரும்போது, தேவையற்ற கால விரயமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவருகிறது.
குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில், சுங்கச்சாவடிகளை அதிகளவு வாகனங்கள் கடக்கும்போது தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக, பணப் பரிவர்த்தனை இல்லாத பாஸ்ட் டேக் முறை, ஏற்கனவே சோதனை முறையில் பல சுங்கச்சாவடிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் வரும் 2021 ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பாஸ்ட் டேக் முறை கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் அருகிலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில், கூடுதலாக 150 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் இனிவரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலும் காலதாமதமும், இந்த சுங்கச் சாவடியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓமலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் முறை - வாகன ஓட்டிகள் வரவேற்பு!