செங்ல்கல்பட்டு அருகே சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி ஒருவர் டிஜிபியிடம் புகார் அளிக்கச் சென்றார். அப்போது, செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சிறப்பு டிஜிபி உத்தரவின்பேரில் செங்கல்பட்டு எஸ்பி ஒருவர் பாலியல் புகார் அளிக்கவிடாமல் தன்னை தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக டிஜிபியிடம் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இது காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுத்த செங்கல்பட்டு எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
மேலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், செங்கல்பட்டு எஸ்பியை பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு எஸ்பி வணிக குற்றப்புலனாய்வு எஸ்பியாக மாற்றப்பட்டார்.
இதனையும் படிங்க: உத்தரகாண்டில் அரசியல் திருப்பம்: முதலமைச்சர் திடீர் ராஜினாமா