செங்கல்பட்டு மாவட்டம் கரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பல்லாவரம் தாலுகாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்லாவரம் நகராட்சி சுகாதார ஊழியர்கள், பல்லாவரம் நகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களிலும் வரும் நபர்களுக்கு உடல் வெப்பத்தை தெர்மாமீட்டர் கருவியைக் கொண்டு பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, சுகாதார அலுவலர் கூறுகையில், “வெப்ப பரிசோதனைக்கு உட்படும் நபர்கள் உடல் வெப்பம் 100க்கு அதிகமாகக் காணப்பட்டால் உடனடியாக அவர்களின் பெயர், முகவரி, மொபைல் நம்பர் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்வோம்.
மேலும் அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.