ETV Bharat / state

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி உயிரிழப்பு - வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட வெள்ளைப் புலி நேற்று இரவு உயிரிழந்தது.

வெள்ளைப் புலி உயிரிழப்பு
வெள்ளைப் புலி உயிரிழப்பு
author img

By

Published : Mar 24, 2022, 12:03 PM IST

செங்கல்பட்டு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 13 வயதுடைய வெள்ளை நிற பெண் புலி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தப் புலிக்கு, கடந்த சில நாள்களாக அடாக்சியா என்ற பாதிப்பு இருந்து வந்தது என்கிறது உயிரியல் பூங்கா நிர்வாகம். இதன் காரணமாக புலியின் செயல்பாடுகள், முற்றிலும் முடங்கியதாகத் தெரிகிறது.

வெள்ளைப் புலி உயிரிழப்பு: கால்களில் இயக்கம் முடங்கியதோடு, உணவும் உட்கொள்ளவில்லை. அந்தப் புலியைக் காப்பாற்ற தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 23) இரவு 9 மணி அளவில் புலி உயிரிழந்துவிட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், நிபுணர்கள் அடங்கிய குழுவினரால் முறைப்படி உடற்கூராய்வு செய்த பிறகு, முழுமையான காரணம் தெரியவரும் என்கின்றனர் பூங்கா அலுவலர்கள்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.