ETV Bharat / state

“விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன்”- விசிக வேட்பாளர் வாக்குறுதி!

செங்கல்பட்டு: விவசாயிகளுடன் விவசாயியாக வேர்க்கடலை பிடுங்கி, செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு நூதன பரப்புரையில் ஈடுபட்டார்.

விசிக வேட்பாளர் வாக்குறுதி
“விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன்”-விசிக வேட்பாளர் வாக்குறுதி
author img

By

Published : Mar 31, 2021, 4:40 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பூந்தண்டலம், நடுவக்கரை, வீராபுரம், பெரிய காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், விடுதலை சிறுத்தைகள் கட்சி, செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் பனையூர் மு.பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு நூதன பரப்புரையில் ஈடுபட்டார்

இந்நிலையில் பெரிய காட்டுப்பாக்கம் பகுதியல் விவசாயிகள் வயலில் வேர்கடலை பிடுங்கி கொண்டு இருந்தனர். உடனே வாகனத்தில் இருந்து இறங்கி வயலுக்குச் சென்று, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது தான் என்றும் விவசாயிகளின் நண்பனாக இருப்பேன் என்பதை உணர்த்தும் வகையில், அவர்களுடன் அமர்ந்து வேர்க்கடலை பிடுங்கி, அவர்களுக்கு உதவி செய்தார்.

வேட்பாளர் மக்களோடு மக்களாக விவசாயிகளின் நண்பனாக இருக்கும் மனிதநேயமிக்க மனிதர் என்பதை உணர்ந்து விவசாயிகள், தங்களது மகிழ்ச்சியையும், ஆதரவையும் வெளிப்படுத்தினர். இதில் திமுக திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் சரவணன், அப்துல்மாலிக், பாபு விசிக நிர்வாகிகள் ஏழுமலை, தயாளன் மணவாளன் குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் நீதிமன்ற வளாகத்தை ஆய்வுசெய்த நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.