ETV Bharat / state

அதிமுகவுக்கு 2 ஆப்புகள் தயார்; ஒன்னு சசிகலா... இன்னொன்னு இதுதான்! 'வேல்' ஏந்திய உதயநிதி - Vail-carrying Udhayanidhi

செங்கல்பட்டு: கேளம்பாக்கம் அருகே தையூரில் நேற்று (ஜன. 31) மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதிக்கு வேல், வால் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

'வேல்' ஏந்திய உதயநிதி
'வேல்' ஏந்திய உதயநிதி
author img

By

Published : Feb 1, 2021, 7:18 AM IST

Updated : Feb 1, 2021, 9:00 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூரில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உதயநிதி உதிர்த்த சில சொற்கள் இதோ...

  • நான் கருணாநிதியின் பேரன் கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டேன். கூடிய விரைவில் அதிமுகவிற்கு இரண்டு ஆப்புகள் உள்ளன.
  1. ஒன்று சசிகலா வெளியே வந்தவுடன் நடக்கும்.
  2. இன்னொன்று தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு அளிக்கப் போகும் வாக்கு.
  • அதிமுக அரசின் மீது மக்களுக்குப் பெரிய அவநம்பிக்கை வந்துள்ளதாக, வரும் தேர்தலில் நிச்சயமாக திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்பது உறுதி. ஏனென்றால் அரசு நடத்தக்கூடிய கிராமசபைக் கூட்டம் நடத்தாமல் விட்டதினால் ஸ்டாலின் ஒவ்வொரு கிராமமாக கிராமசபைக் கூட்டம் நடத்திவந்தார் .
  • அடுத்து ஒவ்வொரு தொகுதியாகவும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்கின்ற தலைப்பில் பரப்புரை செய்துவருவதால் மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது.

வேல், வால் நினைவுப் பரிசுகள்

இதனையடுத்து மாற்றுக் கட்சிகளிலிலிருந்து விலகி திமுகவில் இணையும் நபர்கள் மாலை அணிவித்து வேல், வால் போன்ற நினைவுப் பரிசுகளை வழங்கி கட்சியில் இணைந்தனர்.

'வேல்' ஏந்திய உதயநிதி

இவ்விழாவில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் தாமோ. அன்பரசன், திருப்போரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இதய வர்மன் ஒன்றியச் செயலாளர் சேகர், கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated : Feb 1, 2021, 9:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.