செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், கதிரவன் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த ஆறு மாதங்களாக தனது ஃபேஸ்புக் பதிவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மகளிரணியினர் ஆகியோர் மீது அவதூறாகப் பேசிவருகின்றனர்.
எனவே அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுராந்தகம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கவினாவிடம் இன்று (அக். 26) புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "இளைஞர்கள் மீது உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்