ETV Bharat / state

மதுரையைச்சேர்ந்த இருவர் மதுராந்தகத்தில் தற்கொலை - suicide

மதுரையில் காணாமல் போன இருவர் மதுராந்தகம் அருகே தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரையைச் சேர்ந்த இருவர் மதுராந்தகத்தில் தற்கொலை

author img

By

Published : Sep 6, 2022, 5:09 PM IST

செங்கல்பட்டு: மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் கிராமத்தில் ஆண், பெண் என இருவர் தூக்கில் தொங்கியவாறு உயிரிழந்து கிடந்ததாக மதுராந்தகம் காவல் துறையினருக்கு இன்று (செப் 6) தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச்சேர்ந்த அருள்ஜோதி என்பதும், சென்னம்பட்டியைச்சேர்ந்த முத்துலட்சுமி என்பதும் தெரிய வந்தது.

தற்கொலை என்றும் தீர்வல்ல
தற்கொலை என்றும் தீர்வல்ல

இவர்கள் இருவரும் கடந்த நான்காம் தேதியிலிருந்து மதுரையில் காணாமல் போனதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மதுராந்தகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, காதல் பிரச்னையால் இந்த தற்கொலை நடந்ததா?, அல்லது வேறு ஏதும் காரணமா என தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீதிமன்றத்தில் பிரபல ரவுடியை கொல்ல முயற்சி; உதவி ஆணையர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.