ETV Bharat / state

பாரம்பரியத்தை பறைசாற்றும் உணவுத் திருவிழா!

காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மரபுசார் விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று (செப்.26) நடைபெற்றது.

பாரம்பரியத்தை பறைசாற்றும் உணவுத் திருவிழா

author img

By

Published : Sep 26, 2021, 10:08 PM IST

செங்கல்பட்டு: துரித உணவுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் தற்போதைய தலைமுறைக்கு, மரபுசார்ந்த உணவுகளை நினைவுபடுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள, எஸ்.ஆர்.எம்.,பல்கலைக்கழக வளாகத்தில், தேசிய மரபுசார் விதைகள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா இன்று (செப்.26) நடைபெற்றது.

இவ்விழாவில், காலமாற்றத்தால் குறைந்துபோன ஏராளமான நெல் வகைகள், அரிசி வகைகள், தானிய வகைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. முக்கால்வாசி காற்றால் நிரப்பப்பட்ட பாக்கெட்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை உண்ணும் தற்போதைய தலைமுறைக்கு, வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

உணவுத் திருவிழா

தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, தலா இரண்டு கிலோ வீதம், அரியவகை மரபுசார் நெல் விதைகள் பரிசாக அளிக்கப்பட்டன. காலத்தால் அழிந்து போன அரிய, நெல் வகைகளைப் பயிரிட்டு அறிமுகப்படுத்துவதோடு,அடுத்த ஆண்டு நடைபெறும் விழாவில், ஒவ்வொருவரும் தங்கள் விளைச்சலில் இருந்து, நான்கு கிலோ விதை நெல்லைக் கொண்டு வந்து மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டுமென இவ்விழாவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும்,இதில், 70 ஆயிரம் ரூபாய் விலையுள்ள அரிய வகை சேவல், காங்கேயம் பசு மாடு, காங்கேயம் காளை, ஜல்லிக்கட்டுக் காளைகள் போன்றவை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.பாரம்பரிய விவசாயத்தை காத்து வந்த நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பாரம்பரிய விதைகள் மற்றும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

பாரம்பரியத்தை பறைசாற்றும் உணவுத் திருவிழா

பல மாவட்டங்களிலிருந்து, இயற்கை முறையில் விவசாயம் செய்வோரும், பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடுவோரும், இயற்கை வேளாண் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருவோரும் அரங்குகள் அமைத்து தங்கள் பொருட்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்தனர்.

இதையும் படிங்க : ’ரயில்வே பணி நியமன உத்தரவை திரும்பப் பெறுக’ - சு. வெங்கடேசன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.