செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், தனது மகன் கௌதமனுடன், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லட்சுமி மீது, லாரி ஏறியது. இதனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மீனவர்கள் தடைக்கால நிவாரண நிதியை ரூ.10,000 ஆக உயர்த்த கோரிக்கை!