செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தவர் தலைமைக் காவலர் சேகர். இவர் நேற்றிரவு வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மதுராந்தகம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருக்கழுகுன்றம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த சேகர், தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பணி முடித்து வீட்டில் இருந்த அவருக்கு நேற்றிரவும் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியைத் தாங்க முடியாத அவர், வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக, காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது