ETV Bharat / state

ஓட ஓட வெட்டி படுகொலை.. செங்கல்பட்டு அருகே நடந்த பயங்கரம்! - செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோயிலில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

author img

By

Published : May 23, 2023, 1:02 PM IST

செங்கல்பட்டு: சிங்கப் பெருமாள் கோவில் அடுத்த தர்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 33). திருமணம் ஆகாத இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் ஒன்றை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தனது நண்பரைக் காண இரு சக்கர வாகனத்தில் கொண்டமங்கலம் நோக்கிச் சென்று கொண்டுள்ளார். அந்த வேளையில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் சேர்ந்த மர்மக் கும்பல் மனோகரனை வழி மறித்து அரிவாளால் வெட்ட முயற்சித்து உள்ளனர்.

இதனால் பயந்து போன மனோகரன் தனது இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிச்சென்று அருகில் இருந்த பள்ளிக்கூட தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின் பக்கமாகச் சென்று பதுங்கி உள்ளார். அப்போதும் அந்த மர்மக் கும்பல் மனோகரனை விடாமல் பின் தொடர்ந்து வந்து, சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்று உள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த மனோகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தேனி ரயில் நிலைய வளாக குட்டையில் விழுந்து இரண்டு மாணவர்கள் பலி! நடந்தது என்ன?

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அருகில் இருந்த காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்து உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மறைமலை நகர் காவல் துறை போலீசார் மனோகரனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பெண் ஒருவருடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவால் மனோகரன் கொலை செய்யப்பட்டாரா?, தொழிலில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக மனோகரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து கொடூரமாக கொலை செய்த இந்தச் சம்பவம் கொண்டமங்கலம் பகுதியில் உள்ள மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தமிழகத்தின் பெரு நகரங்களிலும் கொலைச் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.

ஆகவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க காவல்துறையினர் பல தரப்பட்ட கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இது மாதிரியான கொலைகள் நடைபெறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மகளுடன் காதலை துண்டிக்காததால் கோபம்... இளைஞர் கழுத்து அறுத்து கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.