சென்னை மாநகரில் வசித்து வரும் தம்பதியின் 21 வயதுடைய தங்களுடைய மகள் நேற்று காலை முதல் காணவில்லை என்றும்; அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் பின்னர் வீட்டின் அறையில் சென்று பார்த்தபோது, கடிதம் ஒன்றையும் பெற்றோர் கண்டெடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில், 'அண்ணன் முறை உடைய 23 வயது நபர் ஒருவர், தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாகவும், இருவரும் சேர்ந்து இருப்பது போலவும் சித்தரித்து வைத்துக்கொண்டு தன்னை தொடர்ந்து மிரட்டினார்.
தன்னுடன் வரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டியதால் 23 வயதுநபருடன் விருப்பமில்லாமல் செல்கிறேன். பின், செல்போனில் உள்ள ஆபாசப் புகைப்படங்களை அழித்துவிட்டு தான் வீடு திரும்புகிறேன்’ என உருக்கமாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து அந்த கடிதத்துடன் இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையம் சென்று கண்ணீர் மல்க, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
புகாரை பெற்ற போலீசார் சி.எஸ்.ஆர் (CSR) கூட தராமல் காணாமல் போன இருவரும் கிடைத்தால், ஒப்படைப்பதாகக் கூறி பெற்றோரை அனுப்பி வைத்துள்ளனர். அண்ணன் முறையுள்ள ஒருவர் தங்கையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, தங்கையை மிரட்டி கூட்டிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராணுவ வீரர் எனக்கூறி நூதன முறையில் மோசடி