ETV Bharat / state

பல்கலைக்கழகத்தில் சுகாதாரமற்ற உணவு வழங்கல்? - மாணவிகள் போராட்டம் - Today Chengalpet News

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் விடுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தாயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதி மாணவிகள் போராட்டம்
விடுதி மாணவிகள் போராட்டம்
author img

By

Published : Feb 4, 2023, 2:08 PM IST

Updated : Feb 5, 2023, 11:02 PM IST

விடுதி மாணவிகள் போராட்டம்

செங்கல்பட்டு: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக, விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், பல்வேறு குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது சுமத்தி, இன்று (பிப்.4) அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ளது, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இங்கு ஆயிரக்கணக்கில் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தங்கிப் பயில்கின்றனர்.

விடுதி மாணவிகள் போராட்டம்

பெண்கள் விடுதியில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறி இன்று அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களுக்கு வழங்கப்படும் உணவுகள் முற்றிலும் தரமற்றதாக உள்ளதாக மாணவிகள் கூறுகின்றனர். விடுதியில் உள்ள குளியலறை மற்றும் கழிப்பறைகளில் சுகாதார குறைபாடு நிலவுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். விடுதிக்கு சுண்ணாம்பு பூச வேண்டும் என்று கூறி, ஒவ்வொருவரிடமும் 1,500 ரூபாய் வசூலித்த நிர்வாகம், அந்தப் பணத்தை என்ன செய்தது என்றே தெரியவில்லை என்று மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும் விடுதியில் சரியான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், விடுதியில் வார்டனாக பணிபுரியும் அனிதா என்பவர் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டி உள்ளனனர். விடுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டால், பல மாணவிகளுக்கு தோல் நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்க் கூறப்படும் நிலையில், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியே வந்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இப் போராட்டத்திற்குப் பிறகு, சில பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டதால் பேச்சுவார்த்தைக்காக மாணவிகள் பல்கலைக்கழகத்திற்குள் சென்றனர்.

மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து விடுதி வார்டன் அனிதாவிடம் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தரிடம் கேட்டபோது இதெல்லாம் சிறு சிறு பிரச்சினைகள் நாங்கள் சரி செய்து விடுவோம் என்று கூறினார். சுண்ணாம்பு பூச பணம் வசூல் செய்தது பற்றி கேட்டபோது, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் விசாரிப்பதாகவும் தெரிவித்து அவர் கூறினார்.

அருகில் இருந்த மற்றொரு ஆசிரியர் அந்த பணத்திற்கு மாணவிகளுக்கு ரசீது வழங்கப்பட்டதாகக் கூறினார். அதேநேரம் சுண்ணாம்பு ஏன் பூசப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய போது ஆசிரியர் பதில் கூற மறுத்துவிட்டார். உடல் கல்வி மற்றும் விளையாட்டுக்காக மட்டுமே தனித்தன்மையுடன் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அலட்சியம் - நகராட்சி நிர்வாகம் மீது புகார்!

Last Updated : Feb 5, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.