செங்கல்பட்டு: சென்னை கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியில் பயிலும் மாணவிகளிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா, சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது இதுவரை மூன்று போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் வழக்கின் நீதிமன்றக் காவல் இன்றோடு (ஜூலை 22) முடிவடைந்தது.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இதையொட்டி சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை, 15 நாள்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து, நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவைக் காண, அவருடைய பக்தர்கள் சிலர் குவிந்தனர். அவர்களை அப்புறப்படுத்திய செங்கல்பட்டு போலீஸார், நீதிமன்ற உத்தரவை அடுத்து, சிவசங்கர் பாபாவை பாதுகாப்பாக காவல் வாகனத்தில் ஏற்றி, புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பெகாசஸ்: 'ஊடகங்கள் வாய் திறக்க அஞ்சுகின்றன' - கே.எஸ்.அழகிரி