செங்கல்பட்டு மாவட்டம் நகர்ப்பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கங்காதுரை என்பவருக்குச் சொந்தமான பேக்கரியில் ரூ.70 ஆயிரமும், சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான கோழிக்கறிக் கடையில் ரூ.50 ஆயிரமும், குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர்.
அதில், வட மாநில இளைஞர்கள் இருவர் உணவகத்தில் கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுயத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
ஒரேநாளில் செங்கல்பட்டு நகரில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் அரங்கேறிய தொடர் கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகனம் திருட்டு