சென்னை(Liquor Based News): செங்கல்பட்டு மதுவிலக்கு அமலாக்கத் துறையின் மத்தியப் புலனாய்வு நுண்ணறிவு பிரிவுக்கு, கல்பாக்கம் அருகே போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நுண்ணறிவுப் பிரிவினர், கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் அனுபுரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் அங்கு இயங்கிவந்த போலி மதுபானத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மணிகண்டன், ஜெயலட்சுமி ஆகியோரைக் கைது செய்த அமலாக்கப் பிரிவினர், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பூந்தண்டலம் பகுதியில் செயல்பட்டு வந்த போலி மதுபானத் தொழிற்சாலையையும் சீல் வைத்தனர்.
பறிமுதல்
போலி மதுபானங்கள் தயாரிப்பு தொடர்பாக சதீஷ் என்பவர் அங்கு கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து மொத்தம் 660 லிட்டர் எரிசாராயம், போலி மதுபானப் பாட்டில்களில் ஒட்டப்படும் லேபிள்கள், ஹாலோகிராம் போன்றவை கைப்பற்றப்பட்டன.
மேலும் நான்கு சக்கர வாகனம் ஒன்றையும் இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
அதிரடி வேட்டையில் ஈடுபட்ட காவல் துறையினரை, மதுவிலக்கு அமலாக்கத் துறையின் கூடுதல் இயக்குனர் மகேஷ் அகர்வால் பாராட்டினார்.
இதையும் படிங்க:உண்மையை மறைத்து மனுத் தாக்கல் செய்த கணவர் : ரூ.25 ஆயிரம் அபராதம்