ETV Bharat / state

செங்கல்பட்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு - உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

செங்கல்பட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

e
e
author img

By

Published : Oct 9, 2021, 9:12 AM IST

தமிழ்நாட்டில், புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

அக்டோபர் 6ஆம் தேதி, பரங்கிமலை, இலத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (அக். 9) மீதமுள்ள அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், காட்டாங்குளத்தூர், சித்தாமூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

வாக்குப்பதிவு தொடக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 80 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 199 கிராம ஊராட்சித் தலைவர்கள், ஆயிரத்து 449 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்காக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக, அச்சிறுபாக்கத்தில் 204, மதுராந்தகத்தில் 232, காட்டாங்கொளத்தூரில் 368, சித்தாமூரில் 166 என மொத்தம் 970 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலைக் கண்காணிக்க 80 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: திருப்பத்தூரில் வாக்குப்பதிவு தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.